Avsnitt
-
The Saiva Manram is seeking members' permission to build a new community hall that will accommodate 800 people and provide parking for about 200 cars. However, some members strongly oppose the project. Praba Maheswaran spoke with the President of Saiva Manram, Mr. Sabaratnam Ketharanathan, who strongly supports the plan, and with Mr. Balasubramaniyam Sutharshan, who is firmly against it. - சிட்னியில் கலாச்சார மண்டபம் ஒன்றினைக் கட்டுவதற்குறிய பாரிய முன்னெடுப்பினை சைவமன்றம் மேற்கொண்டுள்ளது. சுமார் 800 பேரை உள்ளடக்கக்கூடிய கலாச்சார மண்டபம் மற்றும் ஏறத்தாழ 200 வாகன நிறுத்துமிடங்கள் என்ற சைவமன்றத்தின் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இதன் பின்னணி பற்றி அறியும் நோக்குடன் இருதரப்பினருடனும் உரையாடினோம். இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ள சைவ மன்றத்தின் தலைவர் சபாரத்தினம் கேதாரநாதன் அவர்களுடனும், உறுதியாக எதிர்க்கும் அணியில் ஒருவரான சைவ மன்றத்தின் செயற்பாட்டாளர் பாலசுப்ரமணியம் சுதர்சன் அவர்களுடனும் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
Saknas det avsnitt?
-
சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் மெல்பனில் அதற்கான கற்கைநெறியை மேற்கொண்டுவந்த இந்திய மாணவி Manpreet Kaur புதுடில்லிக்கு புறப்பட்ட குவான்டஸ் விமானத்தினுள் மரணமடைந்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/07/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான நாடாளுமன்ற இரா.சம்பந்தன் நேற்றிரவு(30) காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார். இது தொடர்பான மேலதிக செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
நடந்து முடிந்த ICC ஆடவர் T20 உலகக் கோப்பை போட்டிகள் குறித்த செய்தியின் பின்னணியை, கிரிக்கெட் ஆர்வலர் பாலசுந்தரம் நிர்மானுசன் அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Sri Lankan Parliamentarian Rajavarodayam Sambandhan, the esteemed leader of the Tamil National Alliance, passed away yesterday, Sunday, June 30th, at the age of 91. Kulasegaram Sanchayan presents a eulogy, featuring comments from Arun Arunthavarajah, coordinator of the Tamil National Alliance in Sydney. - நேற்று, ஜூன் முப்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தனது 91ஆவது வயதில் காலமான இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, சிட்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றும் அருண் அருந்தவராஜாவின் கருத்துகளுடன் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை, நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் கடும் அமளி மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/07/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
The opposition Liberal Party has suddenly announced that if it wins the election and comes to power, it will establish a nuclear power infrastructure. However, the ruling Labor Party and the opposition Greens oppose the nuclear project. Against this backdrop, R. Sathya Nathan, a veteran in the media industry, summarises the pros and cons of nuclear power and the arguments of the parties on this issue. Produced by RaySel. - தாம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் ‘nuclear energy’ அணுமின்சக்தி கட்டமைப்பை ஏற்படுத்துவோம் என்று எதிர்கட்சியான லிபரல் கட்சி அறிவித்துள்ளது. ஆனால் அணுசக்தி திட்டத்தை ஆளும் லேபர் கட்சியும், எதிர்கட்சியான கிரீன்ஸ் கட்சியும் எதிர்க்கின்றன. இந்த பின்னணியில், அணுமின் சக்தியின் நன்மை, தீமைகளையும், இது தொடர்பான கட்சிகளின் வாதங்களையும் தொகுத்தளிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
புதிய நிதியாண்டு (2024 – 2025) இன்று ஜூலை மாதம் ஒன்றாம் தேதி துவங்குகிறது. இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் மாற்றங்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
இந்த வார முக்கிய செய்திகள்: 29 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
On June 5, US astronauts Sunita Williams, of Indian origin, and Barry Wilmore traveled from Earth to space. However, they are now unable to return to Earth. R. Sathyanathan, a veteran broadcaster, describes the incident and its developments. Produced by RaySel. - அமெரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை Sunita Williams மற்றும் Barry Wilmore ஆகிய இருவரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பூமியிலிருந்து விண்வெளிக்கு சென்றார்கள். ஆனால் மீண்டும் பூமிக்கு திரும்ப இயலாமல் அவர்கள் விண்வெளியில் உள்ளனர். இந்த அறிவியல் செய்தியை விவரிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
மெல்பன் நபரொருவர் தனது காரிலிருந்து சிகரெட்டின் அடித்துண்டை வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருந்த நிலையில் இதற்கான தண்டனையாக அவர் 1120 டொலர்களை செலுத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
The Economist Intelligence Unit (EIU) 2024ம் ஆண்டுக்கான most liveable cities index-தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Julian Assange has been convicted under the US Espionage Act, with his guilty plea enabling him to come home to Australia. But, is that all his story? Kulasegaram Sanchayan brings the background to what made Julian Assange so popular. - அமெரிக்க உளவுச் சட்டத்தின் கீழ் ஜூலியன் அஸ்ஸாஞ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதன் பின்னர், அவர் ஆஸ்திரேலியாவுக்கு சுதந்திர மனிதனாகத் திரும்பியுள்ளார்.
-
டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இம்மாதம் கொண்டாடப்படும் பின்னணியில் அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். உண்மை மற்றும் சட்ட நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை நிறுவுவது பொதுமக்களுடன் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
In Australia, 30 June marks the end of the financial year and the start of tax time. Knowing your obligations and rebates you qualify for, helps avoid financial penalties and mistakes. Learn what to do if you received family support payments, worked from home, are lodging a tax return for the first time, or need free independent advice. - ஆஸ்திரேலியாவில் உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/06/2024) செய்தி.
- Visa fler