
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.