Avsnitt
-
மறுமையில் காப்பாற்றும் சூராக்களுடைய சிறப்புகள்
சூரா அல் பகரா
சூரா ஆல இம்ரான்
சூரா இக்லாஸ்
ஆயத்துல் குர்ஸி
சூரா அல் முல்க்
-
முடிந்த அளவு நின்று வணங்குங்கள் லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் மஃரிப் இஷாவையும் பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுங்கள் இமாமுடன் இரவுத் தொழுகைகளை தொழுங்கள் சிறிய துஆக்களை அதிகமாக ஓதுங்கள் லைலத்துல் கத்ருடைய இரவுக்கு உயிர் கொடுங்கள் கவனச்சிதறல் ஏற்படுத்துபவைகளை அகற்றுங்கள்
-
Saknas det avsnitt?
-
தள்ளாத வயதினர் நோயாளிகள் பயணிகள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும்
நோன்பை விட்டுவிட சலுகை உண்டு
-
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.
நூல் : புகாரி 4507
-
பேரிச்சம்பழம் கொண்டுதான் நோன்பு துறக்க வேண்டுமா?
நோன்பு துறப்பதற்கு முன் ஓதும் துஆ என்ன?
நோன்பு திறந்தப்பின் ஓதும் துஆ என்ன?
-
எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 1
-
ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல் விடி ஸஹர் கூடுமா? ஸஹர் நேரத்தில் அதிகமாக சாப்பிடலாமா?
-
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
-
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!
திருக்குர்ஆன் 2:187
நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957
-
ரமலான் மாதம் எத்தகையது என்றால் நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் (2:186)மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் (97 :1-5) -
நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.
நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904
-
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903
-
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
[அல்குர்ஆன் 2:183]
-
சஹாபாக்கள் அரபு மொழியின் வீழ்ச்சியை ஆரம்ப காலத்திலேயே கவனித்தனர். அலி (ரலி) அவர்கள் அவருடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை அரபு குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் பேசுவதையும் பார்த்து, இவர்கள் பேசுவது அரபுகளுடைய மொழி இல்லை என்று கூறினார்.
நபியவர்கள் காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் மூன்று பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுகிறது
1. குர்ஆனைப் பாதுகாக்கவும்
2. ஹதீஸைப் பாதுகாக்கவும்
3. அரபு மொழியைப் பாதுகாக்கவும்
அந்த காலகட்டத்தில் நல்ல தூயமையான அரபியைப் பெற விரும்பினால், பாலைவனத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய நாடோடி மற்றும் கிராமத்து அரேபியர்களிடத்தில் பேச வேண்டும். இமாம் ஷாபி, அஸ்மாயீ போன்றவர்கள் அந்த மொழியை அதன் தூய்மையில் வடிவத்தில் பாதுகாக்க நிறைய இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டனர்.
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பேசப்பட்ட அரபு மொழி, மிக வளமான செம்மொழியாக இருந்தது.
அந்த தொன்மையான அரபு மொழியில் தான் குர்ஆன் அருளப்பட்டது.
நவீன காலத்து அரபு மொழிக்கும், பழமையான அரபு மொழிக்கும் மிகப்பெரும் வித்த்தியாசங்கள் உள்ளன.
-
மூன்று வகையான அரபு மொழி
பேச்சுவழக்கு அரபு மொழி [عامية] Spoken Arabic முறையான சரியான அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَالمُعَاصَِةُ] Formal Arabic பண்டைய/பழைய அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَةُ القَدِيَْةُ] Old Arabic/ Classical Arabic/ Ancient Arabic -
ஆயா என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல்
-
குர்ஆனின் பார்வையில் ஆயத்
எதுவெல்லாம் ஆயத்?
எதுவெல்லாம் ஆயத் இல்லை?
-
ஆயா என்றால் என்ன?
ஆயாவை ‘வசனம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?
ஆயாவை வாக்கியம் என்றோ அல்லது வரி என்றோ ஏன் மொழிபெயர்க்க முடியாது?
ஒவ்வொரு ஆயாவும் ஒரு வர்த்தயை விடவோஅல்லது ஒரு வாக்கியத்தை விடவோ சிறியதாக இருக்கலாம்
அல்லது பல ஆயத்துக்கள் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம்
அல்லது பல வாக்கியங்கள் சேர்ந்தது கூட ஒரு ஆயத்தாக இருக்கலாம்.
-
சூரா என்றால் என்ன?
· குர்ஆன் 114 சூராக்களால் ஆனது
· சூராவை ‘அத்தியாயம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?
· ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் மீண்டும் மீண்டும் வராது.
· ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் முந்தைய அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
· சூராக்களைப் போல் அல்லாமல் அத்தியாயங்கள் ஒரு காலவரிசை வரிசையில் அமைந்திருக்கும்.
· அத்தியாயங்களின் வரிசையை மாற்றினால் ஒரு புத்தகம் அர்த்தமற்றுப் போய்விடும். ஆனால் சூராக்கள் அப்படியல்ல.
· சூராக்கள் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்படவில்லை.
· குர்ஆனுக்கென்று ஒரு தனிப்பட்ட அமைப்பு உள்ளது.
· அத்தியாயங்களின் தலைப்பு அந்த அத்தியாயத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும். ஆனால் ஒரு சூராவின் தலைப்பு அந்த சூரா முழுவதும் பேசப்படுவதில்லை.
· எனவே, நீங்கள் குர்ஆனை வேறு எந்த இலக்கியங்களுடனும் ஒப்பிட முடியாது. குர்ஆனுக்கு அல்லாஹ் வகுத்த அதன் சொந்த தரநிலை உள்ளது.
- Visa fler